விவசாயிகள் மீதான கொடூர தாக்குதலில் 110 பேர் படுகொலை!

347

நைஜீரியா (30 நவ 2020): நைஜீரியாவில் விவசாயிகள் மீதான கொடூர தாக்குதலில் 110 பேர் கொல்லப்பட் டுள்ளனர்.

நைஜீரியாவில் வயலில் அறுவடை செய்யும் விவசாயிகள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதமேந்திய குழு ஒன்று துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த தாக்குதலில் 110 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

நைஜீரிய ஜனாதிபதி முகமது புஹாரி இந்த தாக்குதலை கண்டித்துள்ளார். ஆனால் விவசாயிகள் மீதான வெகுஜன தாக்குதல்கள் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக்கு பேராபத்து என்பதாக அதிகாரத்தில் இருக்கும் புஹாரிக்கு பல்வேறு சமூகங்களும் அழுத்தம் கொடுத்து வருகின்றன.