முதியோர் இல்லத்தில் பயங்கர தீ - 11 பேர் பரிதாப சாவு!

பிப்ரவரி 01, 2018 541

டோக்கியோ (01 பிப் 2018): ஜப்பான் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 முதியவர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

வடக்கு ஜப்பானில் ஹொக்கைடோ நகரில் சப்போரோ என்ற பகுதியில் உள்ளூர் அமைப்பு முதியோர் இல்லம் ஒன்றை நடத்தி வருகிறது. 3 அடுக்குகள் கொண்ட மாடியில் நிதி நெருக்கடியில் இருக்கும் முதியோர்கள் குறைந்த வாடகையில் தங்கி உள்ளனர். அவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான பணியையும் இந்த அமைப்பு செய்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்றிரவு அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் 8 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் என 11 பேர் சிக்கி பலியாகினர். மற்ற 5 பேர் சிறிய காயங்களுடன் தப்பினர்.

இந்த சம்பவம் நடந்தபோது அங்கு ஊழியர்கள் யாரும் இல்லை என கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...