அமெரிக்க வெள்ளை மாளிகை மாணவர்களால் முற்றுகை!

பிப்ரவரி 22, 2018 741

நியூயார்க்(22 பிப் 2018): அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்கக்கோரி மாணவர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

கடந்த வாரம் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள மார்ஜொரி ஸ்டோன்மேன் டக்ளஸ் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 குழந்தைகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவர்கள் ஒன்றுதிரண்டு துப்பாக்கிக் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு கோரிக்கை விடுத்தனர்.

துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பித்த டக்ளஸ் பள்ளி மாணவர்கள் உட்பட, அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டனர். மாணவர்கள் பேரணிக்கு தலைமை தாங்கிய நிர்வாகிகள் சிலருடன் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், துப்பாக்கி பயன்படுத்துவதன் மீதான சட்டத்தை கடுமையாக்கும் மாணவர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். மேலும், தீவிரவாதத் தாக்குதல் உள்ளிட்ட அசம்பாவித சமயங்களில் தற்காத்துக் கொள்ள ஆசிரியர்கள் துப்பாக்கி எடுத்துச் செல்வதற்கான பரிந்துரையையும் அவர் முன்வைத்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...