சிரியாவின் கவுத்தா பிரதேசம் பற்றிய சில குறிப்புகள்!

மார்ச் 01, 2018 1363

சிரியாவின் டமாஸ்கஸுக்கு அருகிலிருக்கும் இந்நகர் இயற்கை வனப்பு மற்றும் விவசாய உற்பத்தியை கொண்ட பகுதியாகும்.பாரடா ஆறு மற்றும் சூழவுள்ள மலைகள். பழங்கள் காய் கனிகளின் உற்பத்தியென இந்த கெளடா பகுதி சிறப்பம்சங்கள் பலவுள்ள பகுதியாகும். அத்துடன் சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தில் ஒரு முக்கியத்துவம் மிக்க பகுதியாகவும் இந்த கெளடா பகுதி காணப்படுகிறது.

தற்போது ரஷ்ய ஆசாத் கூட்டுப்படை முற்றுகையிட்டு தாக்கிவரும் இந்த கெளடா என்ற பகுதி இதற்கு முன்னரும் கொடூரமாக தாக்கப்பட்டது நாம் அறிந்ததே. தற்போது மூன்று நாளைக்குள் சிவிலியன்களின் 500 க் கணக்கான கொடூர மரணங்களை சந்தித்த இந்த பகுதி முன்பொருமுறை ஒரே தடவையில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் குழந்தைகள் உட்பட மிக பலிகொண்ட தாக்குதலை சந்தித்தது.

அது ஒரு இரசாயன ஏவுகனை தாக்குதலாகும். கௌடா மீது இந்த இரசாயன ஆயுத தாக்குதல் நடந்தது 2013 ஆகஸ்ட் 21 ஆம் திகதி அதி காலையிலாகும். சிரியாவின் டமாஸ்கஸுக்கு அருகிலிருக்கும் இந்நகர் மீது தன் மீதான எதிர்ப்பைக் கட்டுப்படுத்த பசர் அல் அசாதின் இராணுவம் செரின் இரசாயன வாயு அடங்கிய ராக்கெட்டுகளால் தாக்கியது.

இதில் குறைந்தபட்சம் 1,729 வரையிலான குழந்தைகள் பெண்கள் உட்பட இறப்பு பதிவுசெய்யப்பட்டது. 3000ற்கும் மேற்பட்ட குழந்தைகளும் சிறுவர்களும் விஷவாயு தாக்குதல் மூலம் நரம்பியல் நோய்களால் பாதிக்கப்பட்டனர். பின்னர் தடை செய்யப்பட்ட ஆயுத பிரயோகம் என்றவகையில் சர்வதேச விசாரணைக்கு பஷர் அல் ஆசாத் அரசு உட்பட்டது. குறித்த ஏவுகணை கிளர்ச்சியாளர் தரப்பால் ஏவப்பட்டது என ஆசாத் தரப்பு கூறியது.

ஆனால் குறித்த எவுகணை A RPU-14 multiple rocket launcher மூலம் ஏவப்பட்டிருக்கிறது என்பதும் அது கிளர்ச்சியாளர் தரப்பில் இல்லை எனவும் ஐ.நா விசாரணை கமிசன் சொன்னபோது ரஷ்யாவின் துணையுடனும் விசாரணைக் கமிஷனின் பொடுபோக்கு முடிவாலும் வெறும் கண்ணாமூச்சி விளையாட்டாக அதிலிருந்து பஷர் அல் ஆசாத் தப்பிக்க வைக்கப்பட்டார்.

அதன்பிறகு ரஷ்யாவின் விமானப்படை உதவியுடனும் சீனாவின், ஈரானின் பல்கள உதவியுடனும் போரில் இழந்த பகுதிகளை மீட்ட பஷர் அல் ஆசாத் தரப்பு மூர்க்கமாக போரை தொடங்கியது. இந்த அழிப்பு போரை தமக்கு பதிலாக சில பேட்டை ரவுடிகளிடம் கையளித்த திருப்தியுடன் ஐ.நாவும், அமெரிக்க சார்பு சக்திகளும் முதலைக்கண்ணீர் அறிக்கைகளை விட்டவாறு பார்த்துக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு அங்கமாகவே அலப்போ அழிவின் பின்னர் தற்போது கெளடா மீது பாரிய தாக்குதலை ரஷ்ய விமானத் தாக்குதல் உதவியுடன் பஷர் அல் ஆசாத் தரப்பு தொடுத்துவருகிறது.

வழமையான திமோகிரசி நாடக அரசியலுக்கு போராளிகளின் முக்கிய குழுக்கள் மறுப்பு தெரிவித்த நிலையில் இராணுவ ரீதியாக முதுகெலும்பை உடைத்துவிட்டு பின்னர் உட்புகுந்து தமக்கு சாதகமாக சிரியாவில் அரசியல் நிர்ணயம் செய்யவே அமெரிக்க தரப்பு விரும்புவதாக தெரிகிறது. டொனால்ட் ட்ரம்ப்பின் அரசியல் வெற்றிக்கு முன் விளாடிமிர் புடினுடன் சில ரகசிய உடன்பாடுகளுக்கு வந்ததாக கசிந்த தகவல்களில் சிரியா விவகாரமும் உள்ளடங்கியிருந்ததாக செய்திகள் வெளியானமை அவதானிக்க தக்கது. அதன் விளைவுகளையே சிரியா இப்போது கண்டுகொண்டிருக்கிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...