அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு!

March 04, 2018

வாஷிங்டன் (04 மார்ச் 2018): அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மதியம் துப்பாக்கியுடன் வெள்ளை மாளிகை வேலி அருகே வந்த ஒருவர், தன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு. பின் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த துப்பாக்கி சூட்டில் யாரும் காயமடையவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு நடந்தபோது வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் இல்லை.

வெள்ளை மாளிகை அருகே இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவதாக கூறப்படுகிறது.

 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!