சிரியாவில் பசி பட்டினி இறப்பு என தொடரும் இழப்புகள்!

மார்ச் 04, 2018 1790

டமாஸ்கஸ்(04 மார்ச் 2018): சிரியாவில் ரஷ்ய கூட்டுப்படைகளின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் அதிக இறப்புகள், பசி, பட்டினி என இழப்புகள் தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரியாவில் போர் தீவிரமடைந்துள்ளதால் ஞாயிற்றுக்கிழமை இந்த இடத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்த ஐநா தூதர் ஒருவரால் அங்கு செல்ல முடியவில்லை.

பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை அளிப்பதற்காக போர் நிறுத்தத்திற்கு சிரியா ஒப்புக்கொண்ட போதும் அதனை சிரியா நடைமுறைப் படுத்தவில்லை. அதற்கு மாறாக, அதிக மோதல்கள், அதிக இறப்புகள், பசி, பட்டினி மற்றும் மருத்துவமனைகள் மீது குண்டு தாக்குதல் என அதிகக் கவலை அளிக்கும் செய்திகள் வருகின்றன" என்று ஐநாவின் பிரதேச மனிதநேய ஒருங்கிணைப்பாளர் பனோஸ் மௌம்ட்சிஸ் தெரிவித்திருக்கிறார்.

போரினால் ஒரே பகுதியில் 3 லட்சத்து 93 ஆயிரம் பேர் எந்தவித வசதியுமின்றி சிக்கித் தவிக்கின்றனர். தொடர் தாக்குதல்களால் மனித நேய உதவிகளை அளிப்பதற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை என்று ஐ.நா தெரிவித்துள்ளது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...