பாகிஸ்தானில் தலித் இந்து பெண்ணுக்கு எம்.பி.பதவி!

மார்ச் 05, 2018 1159

இஸ்லாமாபாத்(05 மார்ச் 2018): பாகிஸ்தானில் தலித் இந்துப் பெண் ஒருவர் நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்ற மேல்-சபைக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்றது.

சிந்து மாகாணத்தில் 12 இடங்களில் 10 இடங்களை முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி கைபற்றியுள்ளது. சிந்து மாகாணத்தில் இருந்து மேல்-சபைக்கு போட்டியிட்ட இந்து தலித் இனப்பெண் கிருஷ்ண குமாரி கோலி (வயது 39) வெற்றி பெற்றார்.

இதற்கு முன்பும் இதே கட்சி சார்பில்தான் ரத்னா பகவன்தாஸ் சாவ்லா என்ற பெண், நாடாளுமன்ற மேல்-சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கிருஷ்ணகுமாரி கோலி, தார் பகுதியில் நங்கர்பார்க்கர் மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறு கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். ஒரு ஏழை விவசாய குடும்பத்தினை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...