சிரியா தாக்குதல்களை நிறுத்தப் போவதில்லை: அசாத்!

மார்ச் 05, 2018 1919

டமாஸ்கஸ் (05 மார்ச் 2018): சிரியாவில் தாக்குதல்களை நிறுத்தப் போவதில்லை என்று அதிபர் அசாத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கிழக்கு கூட்டாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதிகளில் சிரிய அரசு நடத்தி வரும் தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில். கிளர்ச்சியாளர்களின் பகுதியில் தனது அரசு படைகள் முன்னேறிச் செல்வதால் தாக்குதல் தொடரும் என அதிபர் பஷார் அல்-அசாத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.,வின் போர் நிறுத்த தீர்மானத்திற்கு பிறகும் ரஷிய போர் விமானங்கள் கிழக்கு கூட்டாவில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

அதேவேளை ஞாயிறன்று குழந்தைகள் உட்பட 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், கண்காணிப்புக் குழு ஒன்று தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...