47 வருடங்களுக்கு லாக் ஆன ஆப்பிள் ஐபோன்!

மார்ச் 08, 2018 815

ஷாங்காய் (08 மார்ச் 2018): குழந்தை ஒன்று பாஸ்வேர்டுகளை தவறாகப் பதிவு செய்ததால் 47 வருடங்களுக்கு ஐ போன் லாக் ஆகி பயனற்றுப் போனது.

ஸ்மார்ட் போன் வகைகளில் அதிக பாதுகாப்பு கொண்டது ஆப்பிள் ஐ போன். ஐபோன்களில் 6 முறைக்கு மேல் தவறான பாஸ்வோர்டை பதிவு செய்தால் ஐபோன் டிசேபிள் செய்யப்படும், 10 முறை தவறாக பதிவிட்டால் ஐபோன் தகவல்கள் முழுமையாக அழிக்கப்பட்டுவிடும்.

இந்நிலையில் சீனாவில் 2 வயது குழந்தை தனது தாயின் ஐபோன் வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது தொடர்ச்சியாக தவறான பாஸ்வோட்டை பதிவு செய்ததால் ஐபோன் 47 ஆண்டுகளுக்கு லாக் ஆகியுள்ளது. இதனைச் சரி செய்ய இயலாது என்று ஆப்பிள் நிறுவனம் கை விரித்து விட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...