மியான்மர் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் எதிரொலி - ஆங் சான் சூகி-க்கு வழங்கிய விருது பறிப்பு!

மார்ச் 11, 2018 801

வாஷிங்டன் (11 மார்ச் 2018): மியன்மார் மக்கள் தலைவர் ஆங் சான் சூகி-க்கு அமெரிக்க ஹோலோகாஸ்ட் அருங்காட்சியகம் வழங்கிய மனித உரிமை விருது திரும்பப் பெறப்பட்டது.

மியன்மார் மக்கள் தலைவர் ஆங் சான் சூகி-க்கு, கடந்த 2012-ம் ஆண்டு, அமெரிக்க ஹோலோகாஸ்ட் அருங்காட்சியகம் மனித உரிமை விருதான ஏலி விசெல் விருது வழங்கியிருந்தது.

மியன்மாரில் ரோஹின்யா மக்கள் மீது அந்நாட்டு இராணுவம் கொடூரத் தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கானோரைக் கொன்ற போது, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆங் சான் சூகி அதனைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். உலக நாடுகள் அனைத்தும் ஆங் சான் சூகி-க்கு எதிராக குரல் கொடுத்தன.

இந்நிலையில் ஆங் சான் சூகி-க்கு வழங்கப்பட்ட மனித உரிமை விருது திரும்பப் பெறப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...