பாகிஸ்தானில் நவஸ் ஷெரீப் மீது காலணி வீச்சு!

மார்ச் 12, 2018 529

லாகூர் (12 மார்ச் 2018): பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லாகூரில் நடைபெற்ற கல்லூரி விழா ஒன்றில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்றார். அதில் இருக்கையில் அமர்ந்திருந்த நவாஸ், தன்முறை வந்ததும் பேசுவதற்காக எழுந்து மேடையில் வைக்கப்பட்டிருந்த மைக் முன் வந்தார். அப்போது நவாஸ் ஷெரீப் மேடையில் இருந்த தலைவர்களுடன் கை குலுக்கிக் கொண்டு வந்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக கூட்டத்தி்ல் இருந்த ஒருவர் நவாஸ் மீது திடீரென காலணியை வீசினார். வீசப்பட்ட காலணி நவாசின் மார்பில் பட்டுக் கீழே விழுந்தது. இச்சம்பவத்தால் நவாஸ் ஹெரீப் கடும் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அவரை நவாஸ் ஷெரீபின் ஆதரவாளர்கள் பிடித்து இழுத்துக் கொண்டு சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் நவாஸ் மீது காலணியை வீசியை அந்த நபர் அக்கல்லூரியின் முன்னாள் மாணவர் தலா முனாவர் என்பது தெரிய வந்ததுள்ளது. அவரிடம் அந்நாட்டு காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...