BREKING NEWS: நேபாளத்தில் விமான விபத்து!

March 12, 2018

காத்மண்டு (12 மார்ச் 2018): நேபாளம் தலைநகர் காத்மண்டு விமான நிலையத்தில் விமான விபத்து ஏற்பட்டுள்ளது.

டாக்காவிலிருந்து வந்த வங்கதேச விமானம் காத்மாண்டுவில் தரையிறங்க இருந்தபோது கீழே விழுந்து நொறுங்கியதில் 17 பேர் பேர் மீட்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. . 71 பேர் பயணம் செய்த இந்த விமானத்தில் மீதமுள்ளவர்களின் நிலைமை இன்னும் தெரிய வரவில்லை.

Update: இந்த விமான விபத்தில் 40 பேர் மரணித்துள்ளனர். விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.  67 பயணிகளும் 4 விமான சிப்பந்திகளும் பயணம் செய்த இந்த விமானத்தில் இதுவரை 40 சடலங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. 

காத்மண்டு விமான நிலையத்தில் தரையிறங்கும் வேளையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

 

Rescuers at the airport in Kathmandu on Monday.

 

The plane crashed after approaching the runway from the wrong end, an official told CNN.

Search!