அமெரிக்க வெளியுறவுச் செயலரை நீக்கம் செய்து அதிபர் ட்ரம்ப் உத்தரவு!

மார்ச் 14, 2018 695

வாஷிங்டன் (14 மார்ச் 2018): அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சனை நீக்கம் செய்து அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்த ட்ரம்பின் ட்விட்டர் செய்தியில் ரெக்ஸ் டில்லர்சன் செய்த பணிகளுக்காக அவருக்கு நன்றி தெரிவித்துள்ள டிரம்ப் எல்லாம் நன்றாகவே போனாலும், சில விடயங்களில் முரண்பட்டோம். இரான் உடனான ஒப்பந்தம் மோசமானது என நான் நினைத்தேன். ஆனால், அவர் அதை சரியென்று நினைத்தார்," என்று கூறியுள்ளார்.

மேலும் வடகொரிய விவகாரம் உள்பட பல விவகாரங்களில் டிரம்ப் உடன் பொது வெளியில் அவர் கருத்து முரண்பட்டுள்ளார்.

டில்லர்சனுக்கு பதிலாக சி.ஐ.ஏ உளவு அமைப்பின் இயக்குநர் மைக் போம்பேயோ வெளியுறவுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். டில்லர்சன் நீக்கம் அமெரிக்க அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...