விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மரணம்!

மார்ச் 14, 2018 623

லண்டன் (14 மார்ச் 2018): உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார். அவருக்கு வயது 76.

ஸ்டீபன் ஹாக்கிங் பிள்ளைகளான லூசி, ராபர்ட், டிம் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘எங்கள் அன்புமிகு தந்தை இன்று காலமானார். அவர் பெரிய விஞ்ஞானி அசாதாரண மனிதர். அவரின் பெயரும் புகழும் காலம் கடந்து நிற்கும். அவருக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

அவரது 21 வயதிலேயே அவரை மருத்துவர்கள் கை விட்ட நிலையில் 76 வயது வரை சர்க்கர நாற்காலியில் வாழ்ந்து மரணித்திருக்கிறார். மோட்டார் நியூரான் பாதிப்புக்குள்ளாக்கி சக்கர நாற்காலியில் முடங்கினார். அவர் மரணம் குறித்து கூறிய பல சில கருத்துக்கள் சர்ச்சைக்கு உள்ளாகின. ஆனால் அவை அனைத்தும் கற்பனையாக கூறப் பட்டவை என்று அவரே பின்பு கூறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...