சிரியாவில் இருந்து 24 மணி நேரத்தில் 50 ஆயிரம் பேர் வெளியேற்றம்!

மார்ச் 17, 2018 795

டமாஸ்கஸ் (17 மார்ச் 2018): சிரியாவில் இருந்து கடந்த 24 மாண் நேரத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் வெளியேறி உள்ளனர்.

சிரியாவில் நடைபெற்றும் உள் நாட்டுப் போரில் இதுவரை 5 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 7 ஆண்டுகளாக உள்நாட்டு சண்டை முடிவுக்கு வராமலேயே தொடர்கிறது. இந்நிலையில் தெற்கு சிரியாவில் உள்ள ஆப்ரின் நகரத்தில் துருக்கி படைகளும் அதன் கூட்டாளிகளும் முற்றுகையை விலக்கியதை அடுத்து அங்கிருந்து நேற்று ஒரே நாளில் சுமார் 30,000 பேர் வெளியேறினர். கிழக்கு கூட்டா பகுதிகளில், சிரிய அரசு படைகளால் இலக்கு வைக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து சுமார் 20,000 பேர் வெளியேறி உள்ளனர். இதனால் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சுமார் 50,000 க்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

சிரியாவி அரசுக்கு ஆதரவாக ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த இரு வாரங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உள்பட 1,500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...