மீண்டும் ரஷ்ய அதிபரானார் விளாடிமிடிர் புதின்

மார்ச் 19, 2018 502

மாஸ்கோ (19 மார்ச் 2018): விளாடிமிர் புதின் மீண்டும் ரஷ்ய அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

ரஷ்யாவின் அதிபர் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. மக்கள் அனைவரும் ஆர்வமாக வாக்களித்தனர். வாக்கு பதிவு முடிவடைந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பதிவான மொத்த வாக்குகளின் 76% வாக்குகளைப் பெற்று விளாடிமிர் புதின் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் வரும் 2024-ம் ஆண்டு வரை அவரே அதிபர் பதவியில் நீடிப்பார்.

ரஷ்ய கூட்டமைப்பு கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் போட்டியிட்ட பவெல் குரூடின் 12% வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். 76% வாக்குகள் பெற்றதால் எதிர்க்கட்சிகளே இல்லாமல் புதின் அசைக்க முடியாத வெற்றியை பெற்றுள்ளார். கடந்த 2000 முதல் விளாடிமிர் புதின் ரஷ்யாவின் அதிபராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...