சவூதி வழியாக இஸ்ரேலுக்கு சேவையைத் துவங்கியது ஏர் இந்தியா!

மார்ச் 24, 2018 594

சவூதி மற்றும் இஸ்ரேலுடன் ஒப்பந்தமிட்டு, தனது முதல் விமானச் சேவையை இஸ்ரேலுக்கு துவங்கியது ஏர் இந்தியா நிறுவனம்.

 கடந்த வியாழன் (22-03-2018) அன்று 12.30 மதியம் புது தில்லியில் இருந்து கிளம்பிய ஏர் இந்தியா விமானம், சவூதி அரேபியா வழியே பயணித்து இஸ்ரேலிய  நகரான டெல் அவிவ்க்கு இரவு 07:45 க்கு வந்தடைந்தது.

இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகிய ஒவ்வொரு புறத்தில் இருந்தும் வாரம் மூன்று விமானங்கள் கிளம்பி சவூதி வழியே இனி பறக்கும் என ஏர் இந்தியாவின் அதிகாரப் பூர்வ செய்தியாளர் பிரவின் பட்நாகர் தெரிவித்தார்.

இத்தனை வருடங்களாக இஸ்ரேலுக்கு வான் வழியை அடைத்திருந்த சவூதி அரேபியா, தற்போது இஸ்ரேல்  செல்லும் அனைத்து விமானங்களுக்கும் வழியை திறந்திருப்பது வரவேற்கத் தக்கது என்று மேலும் அவர் தெரிவித்தார்.

வளைகுடா நாடுகளில் அண்டை நாடான கத்தருக்கு தரை மற்றும் வான் வழியை சவூதி அரேபியா தடை செய்திருக்கும் இவ்வேளையில், இஸ்ரேலுக்கு திறந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...