ஆப்பிள் ஐபோன் நிறுவனத்தின் அடுத்த முயற்சி!

மார்ச் 25, 2018 540

நியூயார்க் (25 மார்ச் 2018): ஆப்பிள் ஐஃபோன் நிறுவனம் , மடக்கும் வகையில் புதிய  ஃபோனைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

மடிக்கக் கூடிய வகையில் பல்வேறு நிறுவனங்களும் மொபைல் ஃபோனை உருவாக்கி வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அந்த பட்டியலில் ஆப்பிள் இணைந்திருக்கிறது.

மடிக்கக்கூடிய மொபைல் போன் தொழில்நுட்பத்தை சாம்சங் கேலக்ஸி X சாத்தியப்படுத்தலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் நிறுவனம் இதற்கான கான்செப்ட் மாடலை ஏற்கனவே வெளியிட்டிருப்பதைத் தொடர்ந்து இதற்கான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனினும் ஜெ மேக்ரிகோர் இந்த தொழில்நுட்பம் தற்சமயம் வரை கான்செப்ட் போன்றே இருக்கும் என தெரிவித்திருக்கிறார்.

 

அந்த வகையில் ஐபேட் போன்று பெரிய சாதனம் பாதியாக மடிக்கும் போது மொபைல் போன் வடிவிலான சாதனமாக மாறுவது சற்றே சாத்தியமான ஒன்றாக கருத முடியும். இந்த ஃபேப்லெட் பாதியாக மடிக்கப்பட்ட நிலையில் மொபைல் போனாக இருக்கும். எனினும் இவ்வகை டிஸ்ப்ளேக்களில் இருக்கும் டிரான்சிஸ்டர்கள் மிகவும் மெல்லியதாக இருக்கும் என்பதால், இவை உறுதியாக இருக்காது என குவால்காம் நிறுவன டிஸ்ப்ளே தொழில்நுட்பத்திற்கான மேலாளர் தெரிவித்து இருக்கிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...