ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து -53 பேர் பலி!

மார்ச் 26, 2018 622

மாஸ்கோ (26 மார்ச் 2018): ரஷ்யாவின் ஷாப்பிங் மால் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 53 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவிலிருந்து சுமார் 3600 கி.மீ தொலைவில் சைபீரியா மாகாணத்திலுள்ளது கெமெரோவோ நகரம். இங்குள்ள பிரமாண்ட ஷாப்பிங் மால் ஒன்றில் ஞாயிறன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் மக்கள் அலறியடித்து ஓடினர். தீயில் இருந்து தப்பிக்க சிலர் கட்டிடத்தில் இருந்து கீழே குதித்தனர். இதுவரை வெளியான தகவல்படி 53 பேர் கருகி உயிரிழந்துள்ளனர். சுமார் 70 பேர் பற்றி தகவல் இல்லை. அதில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்று தெரியவந்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.

முன்னதாக தகவல் அறிந்ததும், சுமார் 288 மீட்பு படை வீரர்கள் அங்கு குவிந்தனர். 62 தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இந்த தீ விபத்தால் அந்த பகுதியே புகை மூட்டமாக காட்சியளித்தது.

 

 

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...