யூட்யூப் தலைமை அலுவலத்தில் துப்பாக்கிச்சூடு; படுகொலை!

ஏப்ரல் 04, 2018 870

யூட்யூப் வீடியோக்கள் மூலம் பெற்று வந்த வருமானம் குறைந்ததால், ஆத்திரம் அடைந்து, 1,700 பணியாளர்கள் வேலை செய்யும் YouTube தலைமை அலுவலகம் சென்று பலரைத் துப்பாக்கியால் சுட்டு, பின் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் ஒரு அமெரிக்க இளம் பெண்.

கலிஃபோர்னியாவின் சான் ஃபிரான்ஸிஸ்கோவில் வசிப்பவர் நசிம் அக்டம். இவர் யூட்யூப் இணைய தளத்தில் வீடியோக்களை பதிவேற்றி அதன் மூலம் பெரும் வருவாயை சம்பாதித்து வந்தார்.

சமீபத்தில் யூட்யூப் நிறுவனத்தையும் குறை கூறி பல வீடியோக்கள் பதிவேற்றினார். அதில் நினைத்தால் சிலருக்கு விளம்பரங்கள் காட்டுவதை தடுப்பதாக பேசியிருந்தார். 

படுகொலை செய்த இளம்பெண் அக்டம்

அதன்பின் இவரது வீடியோ சேனல்களை பல்வேறு காரணங்களால் தடை செய்தது யூட்யூப்.

இதனால் கோபமுற்ற பெண்மணி, நேரே அலுவலகம் சென்று கண் மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இறுதியில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். படுகாயம் அடைந்தோர் சான் ஃபிரான்ஸிஸ்கோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முழு விபரம் இன்னும் வெளியிடப் படவில்லை.

அமெரிக்காவில் பள்ளிகள், அலுவலகங்கள் என பொதுமக்கள் புழங்கும் இடங்களில் தினசரி இவ்வாறு துப்பாக்கிச் சூடுகள் நிகழ்வது மிக சர்வ சாதாரணமாகி விட்டது குறிப்பிடத் தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...