காதலியுடன் இருந்த படுக்கை அறை காட்சிகளை இணையத்தில் வெளியிட்ட காதலன்!

ஏப்ரல் 14, 2018 938

கலிபோர்னியா (14 ஏப் 2018): காதலியுடன் படுக்கை அறையில் இருந்த காட்சிகளை இணையத்தில் காதலன் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த இளம்பெண் ஜேன் டோயே. இவரும் டேவிட் கே என்பவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் கடந்த 2013ம் ஆண்டு பிரிந்தனர்.

இந்நிலையில் காதலியுடன் இருந்த படுக்கை அறை காட்சிகளை டேவிட் கே இணையத்தில் வெளியிட்டார். இதனால் மனமுடைந்த ஜேன், 2014ம் ஆண்டு டேவிட்டிற்கு எதிராக கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், தற்போது பாதிக்கப்பட்ட ஜேனுக்கு, அவரது காதலர் டேவிட் 6.45 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ. 42 கோடி ஆகும்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...