லண்டனில் மோடியே திரும்பி செல் என்ற வாசகத்துடன் போராடிய மக்கள்!

April 19, 2018

லண்டன் (19 ஏப் 2018): லண்டனில் இந்திய பிரதமர் மோடிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரதமர் மோடி லண்டன் சென்றபோது புதன் அன்று அங்கு மோடியை வரவேற்பதற்கு பதில் திரும்பி செல் என்ற வாசகத்துடன் நூற்றுக் கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்தில் சிறுமி ஆசிஃபா வன்புணர்ந்து படுகொலை மற்றும் உ.பி வன்புணர்வு என இந்தியாவில் பெண்களுக்கு எதிராக தொடரும் வன் கொடுமைகளை மோடி கண்டு கொள்ள வில்லை என்பதாலும் , ஏற்கனவே 2002 குஜராத் வன்முறையில் அப்போது முதல்வராக மோடி இருந்தபோது முஸ்லிம்கள் படுகொலை செய்யப் பட்டதையும் சுட்டிக் காட்டி லண்டனில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போரட்டக் காரர்கள் "Modi go home' என்ற பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டதோடு கோஷங்களையும் எழுப்பினர். இதனால் லண்டனில் பரபரப்பு ஏற்பட்டது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!