டாக்டர் ஆஃபியா சித்தீக்கி மரணம் குறித்து பரவிய வதந்தி தவறானது!

மே 21, 2018 1421

இஸ்லாமாபாத் (21 மே 2018): அமெரிக்க சிறையில் டாக்டர் ஆஃபியா சித்தீக்கி மரணம் அடைந்ததாக வெளியான தகவல் பொய்யானது என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் வம்சாவளியான டாக்டர் ஆஃபியா சித்தீக்கி அவரிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை மதம் மாற்றுவதாக பொய்யான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப் பட்டு அமெரிக்க சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் சிறையிலேயே இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்த தகவலை டாக்டர் ஆஃபியா சித்தீக்கி குடும்பத்தினர் மறுத்துள்ளனர். அவர் நல்ல உடல் நிலையில் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை பாக்கிஸ்தான் ஊடகம் உறுதிபடுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...