இந்து விதவைகள் மறுமணம் செய்ய பாகிஸ்தானில் அனுமதி!

மே 29, 2018 1097

இஸ்லாமாபாத் (29 மே 2018): பாகிஸ்தானில் இந்து விதவைகள் மறுமணம் செய்யும் மசோதாவுக்கு சிந்து மாகான சட்டமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

பாகிஸ்தானில் இந்துக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையாக இருந்து வந்த இந்து மறுமணம சட்ட மசோதா சென்ற ஆண்டு சிந்து மாகான சட்ட மன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது. பல்வேறு திருத்தங்களின் அடிப்படையில் இந்த சட்டத்திற்கு சட்ட மன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் கணவர் இறந்தாலோ அல்லது விவாகரத்தானாலோ ஆறு மாதங்கள் மறுமணத்திற்கு இடைவெளி இட வேண்டும் என்று அந்த சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. அதேவேளை பிற மத சுதந்திரங்களில் எந்தவித மாற்றமும் செய்யப் படவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...