சிங்கப்பூர் மசூதியில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு!

ஜூன் 02, 2018 872

சிங்கப்பூர் (02 ஜூன் 2018): அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு சிங்கப்பூர் ஜாமியா சுலியா மசூதியில் வரவேற்பு அளிக்கப் பட்டது.

இந்தோனேஷியா, மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு பிரதமர் மோடி அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் சிங்கப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மோடி, சிங்கப்பூரில் ஜாமியா சுலியா மசூதிக்கு சென்று அங்குள்ளவர்களை சந்தித்தார். அவருக்கு அங்கு வரவேற்பு அளிக்கப் பட்டது.

முன்னதாக தமிழர்களால் கட்டப் படும் மாரியம்மன் கோவிலுக்கு சென்ற மோடி அங்கு வழிபாடு நடத்தினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...