ஹிஜாபுடன் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கவுள்ள முஸ்லிம் பெண்!

ஜூன் 07, 2018 787

கோலாலம்பூர் (07 ஜூன் 2018): நியூசிலாந்தில் நடைபெறவுள்ள மிஸ் யுனிவர்ஸ் இறுதிப் போட்டிக்கு மலேசியாவை சேர்ந்த நூருல் ஷம்சுல் ஹிஜாபுடன் கலந்து கொள்ளவுள்ளார்.

மலேசிய தந்தைக்கும், இந்தோனேசிய தாய்க்கும் பிறந்தவர் நூருல். இவர் இதுகுறித்து அவரது சமூக வலைதளத்தில் குறிப்பிடும்போது, "சமூகத்தில் உள்ள சில வரைமுறைகளை உடைத்தெறிந்து ஹிஜாபுடன் கண்ணியமாக மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்பதில் பெருமை அடைகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நான் என் மதத்தை மிகவும் நேசிக்கிறேன். என் இறைவனை அதிகமாக தொழுகிறேன். அதேபோல் என் வெற்றிக்கு அவன் துணை இருப்பான் என்று நம்புகிறேன். என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிஸ் யுனிவர்ஸ் இறுதிப் போட்டி வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இறுதிப் போட்டியில் பங்கேற்கும் 20 பேரில் நூருல் ஷம்சுல் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...