உலகக் கோப்பை கால்பந்து போட்டியைக் காண சவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் ரஷ்யா வருகை!

ஜூன் 14, 2018 794

மாஸ்கோ (14 ஜூன் 2018): உலகக்கோப்பை கால்பந்து போட்டியைக் காண சவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் மாஸ்கோ சென்றடைந்தார்.

ரஷ்யாவில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் முதல் போட்டியில் சவூதி அரேபியா ரஷ்யாவை சந்திக்கிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாமிர் புடின் சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீசுக்கு விடுத்த அழைப்பை அடுத்து, இளவரசர் முஹம்மது பின் சல்மான் வியாழன் அன்று மாஸ்கோ சென்றடைந்தார்.

அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...