ஆப்கானிஸ்தான் தற்கொலை தாக்குதலில் 25 பேர் உயிரிழப்பு!

ஜூன் 17, 2018 550

காபூல் (17 ஜூன் 2018): ஆப்கானிஸ்தானில் நடத்தப் பட்ட தற்கொலை தாக்குதலில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான் அமைப்புக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. ஆனால், ரம்ஜானை முன்னிட்டு, அதற்கு முந்திய 5 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பு ஒன்றை ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அறிவித்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்டு தலிபான்களும் நேற்று முதல் 3 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், அந்நாட்டின் ரோடாட் மாவட்டத்தில் உள்ள நானகர்ஹார் பகுதியில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் தாலிபன்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் உள்பட சுமார் 25 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 16 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே ரம்ஜானை ஒட்டி ஆஃப்கான் அரசு நிறுத்தி வைத்திருந்த போர் நிறுத்தம் வாபஸ் பெறப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...