தலிபான் மீதான போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிப்பு - ஆஃப்கான் அரசு முடிவு!

ஜூன் 18, 2018 579

காபூல் (18 ஜூன் 2018): தலிபான் உடனான போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக ஆஃப்கான அரசு தனிச்சையாக அறிவித்துள்ளது.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தலிபானுடன் ஆஃப்கான் அரசு போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்நிலையில் தாலிபனுடன் ஏற்படுத்திக்கொண்ட தற்காலிக சண்டை நிறுத்த உடன்பாட்டை நீட்டிப்பதாக ஆஃப்கானிஸ்தான் அரசாங்கம் தன்னிச்சையாக அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் முடிவை ஏற்றுக்கொண்டு தாலிபன்கள் அமைதிப் பேச்சுவார்தைக்கு வர வேண்டுமென்று அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி வலியுறுத்தியுள்ளார்.

அசாதாரண நிகழ்வாக, தாலிபன் தீவிரவாதிகள் அங்குள்ள பாதுகாப்புப்படையினரை தழுவியதுடன், பொதுமக்களுடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டனர்.

இருந்தபோதிலும், நாங்கர்ஹர் பகுதியில் தாலிபன்களும், அரசாங்க அதிகாரிகளும் கூடிய கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...