ரயிலில் குழந்தை பிறந்தால் இலவச பயணம்!

ஜூன் 20, 2018 571

பாரீஸ் (20 ஜூன் 2018): பிரான்ஸ் நாட்டில் ரயிலில் குழந்தை பிறந்தால் அந்த குழந்தை இலவசமாக ரயிலில் பயணம் மேற்கொள்ளலாம்

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசிற்கு கர்ப்பிணி பெண் ஒருவர் ரயிலில் சென்றுள்ளார். ஆபேர் ரெயில் நிலையத்திற்கு அருகில் வரும் போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்ட ஊழியர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் பெண்ணிற்கு உதவியாக இருந்தனர்.

பெண்ணிற்கு ரயிலிலேயே குழந்தை பிறந்தது. தற்போது இருவரும் நலமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ரெயில் பிறந்த குழந்தைக்கு பிரான்ஸ் ரெயில்வே சிறப்பு சலுகை வழங்கியுள்ளது. குழந்தை 25 வயது நிறைவு பெறும் வரை ரெயிலில் இலவசமாக பயணம் செய்ய சலுகை வழங்கியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...