சொந்தமாக வீடியோ சேனல் தொடங்க திட்டமா?

ஜூன் 22, 2018 545

சொந்தமாக வீடியோ சேனல் தொடங்க விருப்பமுள்ளவர்களுக்கு இனிய செய்தி.

சமூக வலைதள உலகில் ஃபேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக அதிக பயனர்களை கொண்டது இன்ஸ்டெகிராம். இதில் சொந்தமாக யார் வேண்டுமானாலும் வீடியோ சேனல் தொடங்கிக்கொள்ளும் வசதியை இன்ஸ்டெர்காம் அறிமுகப் படுத்தியுள்ளது.

இன்ஸ்டெகிராம் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ள நிலையில், IGTV என்ற வீடியோ சேனல் தொடங்கும் பகுதியை இன்ஸ்டெர்காம் அறிமுகப் படுத்தியுள்ளது.

இதுகுறித்து அதன் உயர் அதிகாரி கெவின் சிஸ்ட்ராம் கூறுகையில், IGTV என்ற புதிய அப்ளிகேஷனை இன்ஸ்டெர்காம் அறிமுகப் படுத்தியுள்ளது. அதன் மூலம் யார் வேண்டுமானாலும் சொந்தமாக வீடியோ சேனல் தொடங்கி அதி விரைவில் தமது படைப்புகளை அனைவரிடமும் கொண்டு சேர்து விடும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...