BREAKING NEWS: குண்டு வெடிப்பில் ஜிம்பாப்வே அதிபர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்!

June 23, 2018

ஹராரே (23 ஜூன் 2018): ஜிம்பாப்வே நாட்டில் நடத்தப் பட்ட குண்டு வெடிப்பில் அதிபர் எம்மர்சன் மநான்காவா அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்.

ஜிம்பாப்வே நாட்டின் அதிபர் பதவிக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறுகிறது. பிரதான வேட்பாளர்களிடையே பிரசாரம் சூடுபிடித்து வரும் நிலையில் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள புலாவாயோ நகரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிபர் எம்மர்சன் மநான்காவா பேசினார். அவரது பேச்சை கேட்க ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.

பேச்சை முடித்துவிட்டு மேடையில் இருந்து கீழே இறங்கியபோது எம்மர்சன் ம்நான்காவாவை நோக்கி ஒரு வெடிகுண்டு வீசப்பட்டது. வெடிகுண்டு அதிபரின் மீது படாத வகையில் அவரது பாதுகாவலர்களை அவரை ஒருபக்கமாக இழுத்து தள்ளி, எம்மர்சன் மநான்காவாவின் உயிரை காப்பாற்றியதாகவும் இந்த தாக்குதலில் சிலர் காயம் அடைந்ததாகவும் தலைநகர் ஹராரேவில் இருந்துவரும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபரைக் கொல்ல கடந்த ஐந்து ஆண்டுகளில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன," என்று அதிபரின் செய்தித்தொடர்பாளர் ஜார்ஜ் சரம்பா தெரிவித்துள்ளார்.
துணை அதிபர் கெம்போ மொகாதிக்கு இந்த குண்டுவெடிப்பில் காலில் காயம் ஏற்பட்டதாக ஜிம்பாப்வே ஹெரால்டு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இந்தத் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!