முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் குறித்து பரவும் வதந்தி!

June 27, 2018

இஸ்லாமாபாத் (27 ஜூன் 2018): பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான்கான் குறித்து பரவிய வதந்தியை அவரே பார்த்து சிரித்துள்ளார்.

நேற்று முதல் சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், அரசியல் வாதியுமான இம்ரான் கான் குறித்து வதந்தி ஒன்று பரவி வருகிறது. ஆனால் அந்த வீடியோ கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்தார். அவர் அப்போது பாதுகாவலர்களால் மீட்கப்பட்டு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வீடியோ. பிறகு சிகிச்சைக்குப் பின்பு இம்ரான் கான் நலமாக வீடு திரும்பினார்.

இந்த வீடியோ மீண்டும் பரப்பப் பட்டு வருகிறது. அதனை தனது வீட்டில் இம்ரான்கான் பார்த்து சிரித்ததாக கூறப் படுகிறது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!