அமெரிக்காவில் செய்தி நிறுவனத்தில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி!

ஜூன் 29, 2018 598

நியூயார்க் (29 ஜூன் 2018): அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் மாநிலத்தில் செய்தி நிறுவனம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

'தி கேப்பிடல் கெஜட்' எனும் செய்தி நிறுவன அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. அலுவலகத்தில் நுழைந்த மர்மநபர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். சமீப காலத்தில் அந்த செய்தித்தாள் நிறுவனத்துக்கு சமூக ஊடகங்களில் ’வன்முறை அச்சுறுத்தல்கள்’ வந்ததாக தெரிவித்த போலிஸார், இது செய்தி நிறுவனம் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...