வரிவிதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவுக்கு கனடா பதிலடி!

ஜூன் 30, 2018 790

ஒட்டாவா (30 ஜூன் 2018): எஃகு மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு கனடா பதிலடி கொடுத்தே தீரும் என்று கனடா அரசு எச்சரித்துள்ளது.

கனடாவின் எஃகு மற்றும் அலுமினிய 16.6 பில்லியன் கனடா டாலர்கள் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள் ஜுலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அதேபோல அமெரிக்காவின் விஸ்கான்ஸின், பெனிஸில்வேனியா மற்றும் ஃப்ளோரிடா ஆகிய மாகாணங்களில் இருந்து தயாரிக்கப்படும் யோகர்ட், கெட்ச் அப் மற்றும் ஆரஞ்சு பழச்சாறு ஆகியவையும் இதில் அடங்கும்.

அதேவேளை அமெரிக்கா விதித்த வரிகளுக்கு பதிலடி கொடுப்பதிலிருந்து கனடா "ஒரு போதும் பின்வாங்காது" என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...