ஆப்கானிஸ்தானில் தற்கொலை தாக்குதல் - 20 பேர் பலி!

ஜூலை 02, 2018 633

காபூல் (02 ஜூலை 2018): ஆப்கானிஸ்தானில் நடத்தப் பட்ட தற்கொலை தாக்குதலில் 20 பேர் பலியாகியுள்ளனர்.

போரால் பாதிக்கப் பட்ட ஆஃப்கானிஸ்தானில் வரும் அக்டோபரில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஜலலாபாத் நகரில் மருத்துவமனை கட்டத்தை திறப்பு விழாவில் நாட்டின் அதிபர் அஷ்ரப் கானி கலந்து கொண்டார். அவர் சென்ற சில மணி நேரங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.சம்பவத்தில்20 பேர் கொல்லப்பட்டனர். கடைகள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்தது.

இந்துக்கள், சீக்கியர்கள் அப்பகுதியில் அதிகமாக வசிக்கிறார்கள், அவர்கள் தங்களுடைய குறைகள் தொடர்பாக அதிபரிடம் பேசவிருந்த நிலையில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்தஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...