படகு கவிழ்ந்து விபத்து - குழந்தைகள் உட்பட 29 பேர் பலி!

July 04, 2018

ஜகார்த்தா (04 ஜூலை 2018): இந்தோனேஷியாவில் படகு விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 29 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தோனேஷியாவில் உள்ள சுலாவெசி தீவில் இருந்து 139 பயணிகளுடன் சிலாயர் தீவை நோக்கி படகு சென்று கொண்டிருந்தது. படகு துறையில் இருந்து 300 மீட்டர் சென்ற போது மோசமான வானிலை காரணமாக படகு தண்ணீரில் தத்தளித்தது. மேலும் பலத்த காற்று காரணமாக எழுந்த பேரலைகளில் சிக்கி படகு மூழ்கத் துவங்கியது. இந்த படகு விபத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 24 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதில் 74 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 41 பேர்களை தேடும் பணி நடைப்பெற்று வருவதாகவும் இந்தோனேசியா பேரழிவு நிர்வாக அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் இருந்து புறப்பட்ட ஒரு படகில் இருந்து 160 பேர் மாயமாகியுள்ளதாகவும், மோசமான வானிலை காரணமாக தொடர்புகொள்ள முடியவில்லை என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!