என் அங்கங்களை அவர் அசிங்கமாக தொட்டார் - கனடா பிரதமர் மீது பெண் புகார்!

ஜூலை 07, 2018 671

டொரன்டோ (07 ஜூலை 2018): கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பெண் பத்திரிகையாளர் ஒருவர் அளித்துள்ள பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2000ம் ஆண்டில் ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை பியேர் ட்ரூடோ கனடாவின் பிரதமராக இருந்தார். அப்போது கொலம்பியாவில் நடந்த அந்த இசை நிகழ்ச்சியில், 28 வயதான ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார். அதில் ஜஸ்டின் ட்ரூடோ பெண் பத்திரிகையாளர் ஒருவரிடம் தவறாக நடந்ததாக புகார் எழுந்தது. அந்த பெண் பத்திரிகையாளர் இது குறித்து நாளிதழ்களில் ஜஸ்டின் ட்ரூட்டோ என் அங்கங்களை கண்ட இடங்களில் தொட்டார்" என்று கூறியுள்ளார். கனடாவின் கிறிஸ்டன் வேலி அட்வான்ஸ் என்ற இதழிலும் இந்த செய்தி அப்போது வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தற்போது கனடாவில் மீண்டும் இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட துவங்கியுள்ளது. ஆனால் கனடா பிரதமர் அலுவலகமும், ஜஸ்டின் ட்ரூடோவும் அந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

18 வருடங்களுக்குப் பிறகு கனடா பிரதமர் மீது எழுந்துள்ள பாலியல் குற்றச் சாட்டு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...