நாமெல்லாம் ஃபேஸ்புக்கில் பிசியா இருக்கோம் - ஆனால் அதன் நிறுவனர்?

ஜூலை 09, 2018 688

நியூயார்க் (09 ஜூலை 2018): ஃபேஸ்புக் சமூக வலைதளத்தின் நிறுவனர் மார்க், உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தற்கு முன்னேறியுள்ளார்.

தற்சமயம் உலக பணக்காரர்கள் பட்டியல் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் முறையே முதல் மற்றும் இரண்டாவது இடங்களில் உள்ளனர். பங்குச் சந்தையில் ஃபேஸ்புக் நிறுவன பங்குகள் 2.4 சதவிகிதம் வளர்ச்சியடைந்ததைத் தொடர்ந்து அதன் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் பணக்காரர்கள் பட்டியலில் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்.

உலக பணக்காரர்கள் பட்டியலின் முதல் மூன்று இடங்களில் தொழில்நுட்பத் துறையை சேர்ந்தவர்கள் பிடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். உலகின் மூன்றாவது பணக்காரர் ஆன மார்க் சூக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு தற்சமயம் 8160 கோடி டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இது வாரென் பஃபெட்-ஐ விட 37.3 கோடி டாலர்கள் அதிகம் ஆகும்.

எட்டு மாதங்களில் இல்லாத அளவு ஃபேஸ்புக் பங்கு மதிப்பானது மார்ச் 27-ம் தேதி நிலவரப்படி வெகுவாக குறைந்து 152.22 டாலர்களாக இருந்தது. அதன்பின்னர் பங்குகளின் மதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. வெள்ளிக்கிழமையுடன் நிறைவுற்ற பங்குச்சந்தையில் ஃபேஸ்புக் பங்கு மதிப்பு 203.23 டாலர்கள் ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...