ஆப்கானிஸ்தான் தற்கொலை தாக்குதலில் 10 பேர் படுகொலை!

ஜூலை 10, 2018 584

ஜலாலாபாத் (10 ஜூலை 2018): ஆப்கானிஸ்தான் தற்கொலை குண்டு தாக்குதலில் 10 பேர் படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் கிழக்கே ஜலாலாபாத் நகரில் வெடிகுண்டை கட்டி கொண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் பாதுகாப்பு படையினரின் வாகனம் அருகே இன்று வந்துள்ளார். அவர் திடீரென வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளார்.

இந்த சம்பவத்தில் அருகில் இருந்த பெட்ரோல் நிலையம் ஒன்றும் தீப்பிடித்துள்ளது. இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பலர் பொதுமக்கள் என கூறப்படுகிறது. மேலும் காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...