BREAKING NEWS: தாய்லாந்து சிறுவர்கள் அனைவரும் மீட்பு - அற்புத நிகழ்வு!

July 10, 2018

பாங்காக் (10 ஜூலை 2018): தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர் அனைவரும் பத்திரமாக மீட்கப் பட்டனர்.

தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. இந்தக குகை 10 கி.மீ. நீளம் உடையதாகும். கடந்த வாரம் 11 வயது முதல் 16 வயதுவரை உடைய 12 சிறுவர்கள் கொண்ட கால்பந்து அணியைச் சேர்ந்தவர்கள் இந்தக் குகைக்கு சாகசப் பயணம் சென்றனர். இந்தச் சிறுவர்களுடன் சேர்ந்து அணியின் துணைப் பயிற்சியாளர் ஒருவரும் சென்றார்.

ஆனால், இவர்கள் சென்ற சமயம் அங்கு திடீர் மழை பெய்து வெள்ளம் நீர் குகைக்குள் புகுந்தது. நீரும், சேறுமாகக் குகை சூழ்ந்ததால் குகையைவிட்டு வெளியேற முடியாத சூழல் அவர்களுக்கு ஏற்பட்டது. இதனால் இரண்டு வாரங்களாக உணவும், நீரும் இன்றி அவர்கள் குகைக்குள் சிக்கினர்.

தாய்லாந்து நாட்டின் கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அங்கு தற்போது பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் உதவிக்கரம் நீட்ட, மீட்புப் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தாய்லாந்து மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்துள்ள நீச்சல் வீரர்கள் நேற்று களத்தில் இறங்கி 4 சிறுவர்களைப் பத்திரமாக மீட்டுவந்தனர். இந்நிலையில், 2-வது நாளாக இன்றும் மீட்புப்பணி தொடர்ந்து நடந்தது.

இதில் ஏற்கனவே 4 சிறுவர்கள் மீட்கப் பட்ட நிலையில் மேலும் 4 பேர் இன்று காலை மீட்கப் பட்டனர். மீதமுள்ள 4 சிறுவர்களில் 4 பேரும் மற்றும் அவர்களது பயிற்சியாளரும் பத்திரமாக மீட்கப் பட்டனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!