BREAKING NEWS: தென் ஆப்பிரிக்காவில் விமான விபத்து!

July 10, 2018

பிரிடோரியா (10 ஜூலை 2018): தென் ஆப்பிரிக்கவில் சிறு ரக பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் பிரிட்டோரியா நகரில் பயணிகளை ஏற்றி சென்ற சிறு ரக விமானம் ஒண்டர்பூம் விமான நிலையம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து விமானம் அருகில் உள்ள புல்வெளியில் விழுந்து நொறுங்கியது.

மிதமான வேகத்தில் தரையில் விழுந்ததால் விமானத்தின் என்ஜின் பகுதி மற்றும் வால் பகுதி நொறுங்கியது. விமானத்தில் இருந்து கரும்புகை எழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 20 பேர் காயமடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!