வாட்ஸ் அப்பில் ஃபார்வேர்டு செய்பவர்களுக்கு இனி ஆப்பு!

ஜூலை 11, 2018 733

நியூயார்க் (11 ஜூலை 2018): வாட்ஸ் அப் செயலியில் ஃபார்வேர்டு செய்யும் செய்திகளை இனி வாட்ஸ் அப் காட்டிக் கொடுத்துவிடும்.

வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்படும் புதிய அப்டேட் மெசேஜ் ஃபார்வேர்டு செய்யப்படுவதை சுட்டிக்காண்பிக்கிறது. இதனால் உங்களுக்கு வரும் குறுந்தகவல்கள் உண்மையாக டைப் செய்யப்படுகின்றதா அல்லது மற்றவர்களிடம் இருந்து உங்களுக்கு ஃபார்வேர்டு செய்யப்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

புதிய அம்சம் மூலம் செயலியில் பரப்பப்படும் போலி செய்திகளை குறைக்க இது காரணமாக இருக்கும். கடந்த வாரம் வாட்ஸ்அப் செயலியில் சஸ்பீஷியஸ் லின்க் டிடெக்ஷன் (suspicious link detection) அம்சம் சோதனை செய்யப்படுவது தெரியவந்தது.

இந்த அம்சம் மூலம் வாட்ஸ்அப்-இல் பரப்பப்படும் இணைய முகவரிகள் போலியானதா என்பதை வாட்ஸ்அப் தானாக கண்டறியும். இதை கொண்டு போலி தளங்கள் அல்லது தீங்கு விளைவிக்கும் வலைதளங்களை பயனர்கள் மிக எளிமையாக கண்டறிந்து கொள்ள முடியும்.

இந்த வசதியை பெற நீங்கள் வாடஸ் அப்பை மீண்டும் அப்டேட் செய்ய வேண்டும்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...