அபுதாபியில் இருக்கும் நவாஸ் செரீப் கைது செய்யப் படலாம்!

July 13, 2018

அபுதாபி (13 ஜூலை 2018): அபுதாபியில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் பாகிஸ்தான் செல்லும்போது கைது செய்யப் படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

லண்டனிலிர்ந்து லாகூர் செல்லும் நவாஸ் செரீப் அபுதாபி வழியாக செல்லும் விமானத்தில் செல்கிறார். தற்போது அபுதாபியில் விமான நிலையத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நவாஸ் செரீப் இன்று பிற்பகல் லாகூர் செல்கிறார். அவருடன் அவருடைய மகள் மர்யம் நவாசும் உடன் உள்ளார்.

இதற்கிடையே பாகிஸ்தானிலிருந்து சுமார் 30 நவாஸ் செரீபை சந்திக்க அபுதாபி வந்துள்ளனர். நவாஸ் செரீப் லாகூரில் வைத்து கைது செய்யப் படலாம் என்ற உறுதியற்ற தகவல் வெளியானதை அடுத்து நவாஸ் செரீபின் மனநிலையை கண்டறிய செய்தியாளர்கள் அபுதாபி வந்துள்ளனர். அவர்களும் நவாஸ் செரீபுடன் உடன் செல்வார்கள் என எதிர் பார்க்கப் படுகிறது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!