அதிபர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய ஆபாச நடிகை கைது!

July 13, 2018

நியூயார்க் (13 ஜூலை 2018): அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த ஆபாச நடிகை கைது செய்யப் பட்டுள்ளார்.

அமெரிக்காவில் அடல்ட் திரைப்படங்களில் நடிக்கும் ஷடார்லி டேனியல்ஸ் என்ற நடிகை 2016-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கு முன் டிரம்பின் மீது பாலியல் குற்றம் சுமத்தியிருந்தார். அதிபர் டிரம்ப் தன்னுடன் பாலியல் உறவு கொண்டதாகவும் அதை மறைக்க தனக்கு ஒரு லட்சம் டாலர் கொடுத்ததாகவும் பகிரங்க குற்றம் சாட்டினார். ஆனால் அதிபர் தேர்தலில் டிரம்பின் நற்பெயரை கெடுக்கவே அவர் இவ்வாறு கூறினார் என சர்ச்சைகள் கிளம்பியநிலையில் டிரம்ப் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் கேளிக்கை விடுத்தி நடத்திவந்த அந்த நடிகை இளைஞர் ஒருவரிடம் தவறாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்த கைதுபற்றி நடிகை தரப்பு வழக்கறிஞர் இது டிரம்பின் பழிவாங்கும் நடவடிக்கை என கூறியுள்ளார்.

Search!