வெடித்துச் சிதறிய ரசாயன ஆலை - 19 பேர் பலி!

ஜூலை 13, 2018 797

ஷாங்காய் (13 ஜூலை 2018): சீனாவில் உள்ள ரசாயன ஆலை வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளானதில் அதில் சிக்கி 19 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் செயல்பட்டு வரும் ரசாயன ஆலையில் நேற்று மாலை திடீரென வெடித்துச் சிதறியது. ஆலையில் பரவிய தீயால் எங்கும் புகைமூட்டம் காணப்பட்டது. இதனிடையே இந்த விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2015-ம் ஆண்டு சீனாவின் டியாஜின் மாகாணத்தில் ஆலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 165 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...