ஜான்சன் அன்ட் ஜான்சன் பொருட்களால் புற்றுநோய் பாதிப்பு - ரூ.32,000 கோடி அபராதம்!

ஜூலை 14, 2018 689

நியூயார்க் (14 ஜூலை 2018): ஜான்சன்&ஜான்சன் பொருளை பயன்படுத்தியதால் கர்பப் பையில் புற்று நோய் பாதிப்பை ஏற்படுத்தியதால் அந்நிறுவனம் ரூ 32 000 கோடி அபராதம் விதிக்க வேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன பொருட்களை உபயோகிப்பதன் மூலம் கருப்பபை புற்றுநோய் ஏற்படுவதாக 22 பெண்கள் வழக்கு தொடர்ந்தனர். அமெரிக்காவின் மிசவுரி நகர நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பல ஆண்டுகளாக தொடர்ந்து தாங்கள் உபயோகிக்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன பொருட்களால் கர்ப்பபை புற்றுநோய் ஏற்படுவதாக மனுதாரர்கள் தெரிவித்தனர். இதனை மறுத்து ஜான்சன் நிறுவனம், தங்களது பொருட்களால் புற்றுநோய் ஏற்படும் என்பது தவறான தகவல் என வாதிட்டது.

6 வாரங்களாக நடைபெற்று வந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டது. அதாவது 32,000 கோடி ரூபாயை ஜான்சன் அன்ட் ஜான்சன் அபாராதமாக செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதே போன்று மேலும் 9 ஆயிரம் பெண்கள் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் மீது தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது.

ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுகிறது என்று ஏற்கெனவே அமெரிக்காவில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், டால்கம் பவுடரைப் பிறப்புறுப்புப் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பயன்படுத்தினால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது என்று சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...