ட்ரம்ப் சந்திக்க விரும்பும் நபர்?

ஜூலை 20, 2018 712

வாஷிங்டன் (20 ஜூலை 2018): அமெரிக்க அதிபர் ட்ரம் மீண்டும் ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் கடந்த 16-ம் தேதி சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பு, உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ரஷ்ய அதிபருடனான அடுத்த சந்திப்பை எதிர்நோக்கிக் காத்திருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த அந்தப் பதிவில், ``ரஷ்யாவுடனான சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அடுத்த சந்திப்பில், இரு நாடுகளும் ஆலோசித்த பயங்கரவாதத் தடுப்பு, இஸ்ரேல் பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக, அடுத்த சந்திப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...