அணை உடைந்து 100 பேர் மாயம்!

ஜூலை 24, 2018 592

லாவோஸ் (24 ஜூலை 2018): லாவோஸ் நாட்டின் அணை உடைந்து 100 க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக தென் கிழக்கு லவோஸ் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. நேற்று (திங்கட்கிழமை) மாலை லவோஸ் நகரில் உள்ள அட்டபியு மாகாணத்தின் சனாக்சே மாவட்டத்தில் அமைந்துள்ள ஹைட்ரோபவர் அணை உடைந்து விபத்துக்குள்ளானது. அணை உடைந்ததால் ஐந்து பில்லியன் கன மீட்டர் நீரை வெளியேறி வெள்ளம் ஏற்பட்டு, அருகில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் அடுத்து செல்லப்பட்டன. அதில் பலர் மயமாகி உள்ளனர். பலபேர் இறந்திருக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

ஆயிரம்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அந்த பகுதிகள் முழுவதும் கிட்டத்தட்ட 90 சதவீதம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. மாகாணத்தில் உள்ள அதிகாரிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் செய்து வருகின்றனர்.

லவோஸ் நாட்டின் பிரதமர் தொங்லோன் சிசோலித் பாதிக்கப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு, நிவாரண பணிகளை குறித்து கேட்டறிந்து வருகிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...