பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான்கான் முன்னிலை!

ஜூலை 25, 2018 606

இஸ்லாமாபாத் (25 ஜூலை 2018): பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் இம்ரான்கான் முன்னிலை வகிக்கிறார்.

பாகிஸ்தான் உறுப்பினர்கள் மற்றும் 4 மாகாண சட்டசபை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி முடிந்தது. நாடு முழுவதும் 85 ஆயிரம் ஓட்டுப் பதிவு மையங்களில் மக்கள் ஓட்டளித்தனர்.

இத்தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ், மாஜி கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ- இன்சாப், மறைந்த பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி என மும்முனை போட்டி நிலவுகிறது.

8 மணி நிலவரப்படி பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தெஹ்ரீக் இ- இன்சாப் கட்சி, 272 தொகுதிகளில் 1 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் மொத்தம் 319,634 வாக்குகள் பெற்று இம்ரான்கான் முன்னிலையில் உள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...